News
பாராளுமன்ற தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
![](wp-content/uploads/2024/10/Screenshot_2024-10-25-12-08-32-175_com.android.chrome-edit-780x517.jpg)
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எதிராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரினால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/wtsbanner.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/fbbanner.jpg)