இஸ்ரேலில் 5000 வேலைவாய்ப்புகள் : உடனடியாக பதிவு செய்யுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு..
இஸ்ரேலில் நிர்மாணத்துறை சார்ந்த 5,000 வேலைவாய்ப்புகள் இலங்கைக்கு கிடைத் துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வேலை வாய்ப்பினூடாக மாதாந் தம் சுமார் 05 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 26 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட, நிர்மாணத்துறையில் அனுபவமுள்ளவர்கள் இவ்வேலைவாய்ப்புகளுக்கு உடன் விண்ணப்பிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டட புனர்நிர்மாணத்துறையில் 4,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப் புகளும், மேசன் தொழில் துறையில் 500 வேலைவாய்ப்புகளும், (டைல்ஸ்) தரை ஓடுகள் பதிப்புத்துறையில் 500 வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
இத்தொழில் வாய்ப்புகளுக்காக இத்து றைகளில் அனுபவம் உள்ளவர்கள் www. slbfe.lk என்ற இணையத் தளத்தினூடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப் புப் பணியகத்தில் உடனடியாக பதிவு செய் யுமாறும் பணியகம் சுட்டிக்காட்டி யுள்ளது.