News
பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் FCID பிரிவு மீண்டும் ஆரம்பிக்கப் படுகிறது – இடைநடுவில் நிறுத்தப்பட்ட முக்கியமான 12 பைல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான எவ்.சி.ஐ.டி மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ் உயரதிகாரிகள் மீண்டும் அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி ஒன்றினூடாக இந்த விசாரணைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணையின்படி முன்னதாக விசாரிக்கப்பட்டு , இடைநடுவில் நிறுத்தப்பட்ட 12 கோவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

