தேங்காய் பிரச்சினை அரசாங்கத்தின் பிரச்சினையல்ல ; பிர்தௌஸ் நளீமி
தேங்காய் பிரச்சினை அரசாங்கத்தின் பிரச்சினையில்லை என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி குறிப்பிட்டார்.
அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
பொருளாதரத்தை மேம்படுத்த அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றுடன் செயற்பட்டு வருவதாக கூறிய அவர் பதவியேற்று அடுத்த நாள் இந்த பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவர முடியாது.ஒரு சிறிய அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுகொண்டிருக்கிறது.
உங்களுக்கு தெரியும் நாட்டின் பொருளாதரத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும் இப்போது யாரின் கைகளில் அது இருக்கிறது.தேங்காய் பிரச்சினை என்பது அரசாங்கத்தின் பிரச்சினையில்லை.இன்னும் இறக்குமதி செய்கின்ற தேங்காய்களை கொண்டுவருகிறோம் என என அவர் கூறினார்.
தேங்காய் பிரச்சினை போன்ற சிறிய விடயங்களுக்கு தீர்வு வழங்க பாராளுமன்ற பலம் தேவையா? என அவரிடம் வினவப்பட்ட போது,
அதற்கு பதில் அளித்த மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி ஜனாதிபதியினால் செய்ய முடியும் ஆனால் அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என குறிப்பிட்டார்.
பார்பேர்மிட் பெற்றவர்களின் பெயர்கள் எப்போது வெளியிடப்படும் என கேட்கப்பட்டமைக்கு பதில் அளித்த பிர்தௌஸ் நளீமி விரையில் என கூறினாலும் நவம்பர் 14 க்கு முன்னர் அது வெளியிடப்படுமா என்பதற்கு உத்தரவாதம் வழங்கமுடியாது என கூறினார்.