News

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரவளிப்போம் ! நாட்டிற்கோ சமூகத்திற்கோ பாதகமான விடயங்களை எதிர்ப்போம் ..

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை நாட்டிற்கோ சமூகத்திற்கோ பாதகமான விடயங்கள் வந்தால் அதனை எதிர்ப்போம் என கண்டி மாவட்ட சுயேற்சை குழு வேட்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபைஉறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.

திகன பிரதேசத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பிரதேச சபை மட்டத்தில் தேர்தல் தொகுதி மட்டத்தில் மக்களோடு இருந்த ஒரு பலமான அணி எம்மோடு இம்முறை களமிறங்கியுள்ளது.

சுயேற்சை குழு என்றால் கொள்கை இருக்காது என சிலர் விமர்சனம் செய்கின்றார்கள்.சமூகத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளில் இருந்தவர்கள் கட்சி தாவிய வரலாறுகள் உள்ளன.தலைவர் மௌனமாக இருக்க உறுப்பினர்கள் அரசியலமைப்பு திருத்தங்களை ஆதரித்த கட்சிகளும் உள்ளன.கொள்கைகளை மறந்து வெளிநாட்டு அஜண்டாக்களுக்கு வேலை செய்யும் தலைவர்களுன் உள்ளனர். அவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

நாம் பாராளுமன்றம் சென்றால் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை சமூகத்திற்கு பாதகமான ஏதும் வந்தால் கண்டி மாவட்டத்தில் எம்மோடு இருக்கும் உலமாக்கள் புத்திஜீவிகளுடன் துறைசார்ந்தவகளின் ஆலோசனைகளுடன் எம்மால் சில முடிவுகளை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர் எமக்கு கட்சித்தலைமையிடம் இருந்து வஹியும் வராது. கட்டளைகளும் வராது நாம் சுயாதீனமாக செயற்பட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

நானும் சகோதரரர் இஷ்திஹாரும் நாம் மக்களுக்கு கடந்த ஒரு தசாப்தாமாக செய்துள்ள சேவைகளை மூலதனமாக வைத்தே தேர்தலில் குதித்துள்ளோம் என கூறிய அவர் கட்சிகளையொ கட்சி தலைமைகளின் பெயர்களை வைத்து ஓட்டு கேட்க வரவில்லை என அவர் குறிப்பிட்ட அவர் நாம் கட்சி அலையில் அள்ளுண்டு வந்தவர்கள் அல்ல என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button