News
மட்டக்களப்பு மற்றும் கொழும்பு அதி சொகுசு பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி… பலர் படுகாயம்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்தும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அதி சொகுசு பேருந்தும் குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி. பலர் படுகாயம். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .குறிப்பிட்ட பஸ் ஒன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்