இனிமேலும் சுயநல அரசியல் வாதிகளின் வலைகளில் சிக்கி மக்கள் வாக்களிக்கப் போவதில்லை ; கம்பளை மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவிப்பு
கம்பளை மக்கள் சந்திப்பு – இவ்வளவு காலமும் அவர்கள் சொல்லும் கட்சிக்கே வாக்களித்தீர்கள்.
பிரமாண்ட மேடை அமைத்து, கட்சிக்கு கட்சி தாவி வசீகரமாக பேசி பலருடன் கூட்டும் சேர்ந்தார்கள்.
எமது நாடு அதல பாதாளத்துக்கு செல்லும் போதும், எமது கடை, வீடுகள் நொறுக்கப்படும் போதும், ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போதும் அவர்களோடு கை கோர்த்து பேச முடியா மெளனிகளானார்கள்.
இந்த நாடு இனவாதத்தாலும் ஊழலாலும் , ஏமாற்றுப் பேர்வழிகளாளும் சூறையாடப்பட்ட இருண்ட உலகத்தை விட்டு மீள நினைக்கிறது.
இனியும் அவர்களோடு பயணிக்க எமது சமூகம் தயாரில்லை என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு எமக்குக் காட்டுகின்றது.
எமது எதிர்கால தலைமுறைகளுக்கான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் ஒரு கூட்டு முயற்சியில் நாட்டு மக்கள் இறங்கி விட்டனர்.
இத்தருணத்தில் வாக்குகளை சிதறடித்து ஆளும் கட்சியின் பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் இழக்கச் செய்வதற்கான போலியான, உணர்வு பூர்வமாண பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத்தான் அவர்களின் அரசியல் கலாச்சாரமாக
காலா காலமாக செய்து வருகிறார்கள்.
எனவே இனியும் சுயநல அரசியல் வாதிகளின் வலைகளில் சிக்கி மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று கம்பளை மக்கள் சந்திப்பின் போது கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 11ம் இலக்கத்தில் போட்டியிடும் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவித்தார்.