News

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்

புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 190 முதல் 195 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், பட்டர், முட்டை போன்றவையும் அதிக விலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை 1000 முதல் 1200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கேக் விலையும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Recent Articles

Back to top button