News
கிராம உத்தியோகத்தர் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பட்டதாரிப் பெண் திடீர் உயிரிழப்பு
கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரிப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக உடம்பர பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுன்னஸ்கிரிய ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த பிலிப் நக்மா என்ற 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.எம்.ஆர். அனுருத்த ரத்நாயக்க பிரேத பரிசோதனை மேற்கொண்டர்.
இதன்போது, மூளையில் கட்டி வெடித்து இரத்தம் கசிவால் இந்த மரணம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்