News
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் மேம்படுத்தப்படும் ; நிதியமைச்சு அறிவிப்பு
திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், இலங்கை திரிபோஷா நிறுவனத்தை கலைக்கும் திட்டமோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது