News

நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என்பது உங்களுக்கு தெரியும், அதையறிந்தும் இங்கு வந்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறேன் என கூறி மேடையில் கதறி அழுது கண்ணீர் விட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (10)  பிற்பகல்  நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றின் போது முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டுள்ளார்.

“ கேஸ் சிலிண்டருக்கும் ,11 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்தாலும்  ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதையறிந்தும் இங்கு வந்து நன்றிக்கடன் செலுத்துகிறேன். ” என்று  கூறி முன்னாள் அமைச்சர் கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டார்.

“எனக்கு வாக்களித்தீர்களா என்று நான் மக்களிடம் கேட்க மாட்டேன். நான் தனிப்பட்ட முறையிலும் பார்க்க மாட்டேன். நான் மக்களுடன் இருந்தேன். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினராக உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்.

மீனுக்கு தண்ணீர் வேண்டும், ராணுவ வீரனுக்கு ஆயுதம் வேண்டும்.  அது போல அரசியல்வாதிக்கு மக்கள் தேவை. அரசாங்கம் இல்லாவிட்டாலும்  என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நான் விரக்தியடைந்து அரசியலை விட்டு விலக மாட்டேன்.” என்றும் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button