News

நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் பணியைப் பாராட்டி நினைவுச் சின்னம்

பௌத்த மதத்திற்கும் நாம் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப உலகிற்கும் இடையில் பாரிய தொடர்பு இருக்கின்றது எனவும் உலகம் எதிர்நோக்கும் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வழி புத்தரின் போதனைகளில் உள்ளடங்குகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அமரபுர மகா நிகாயவின் அமரபுர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வெலிதர, மஹகராவே ஞானவிமலதிஸ்ஸ தேரரின் மாபெரும் அர்ப்பணிப்பின் பின்னர் 1802 ஆம் ஆண்டு அமரபுர மகா நிகாய ஸ்தாபிக்கப்பட்டது.

222 வருடங்களாக புத்த சாசனத்திற்காக பெரும் பணியை ஆற்றிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் அமரபுர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ அமரபுர சாமகிரி சங்க சபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை அமரபுர மகா நிகாயவின் தலைவர், பதில் வண. கரகொட, உயங்கொட மைத்ரி மூர்த்தி மகாநாயக்க தேரர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் அமரபுர மகா நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் பிரசன்னமாகியிருந்ததுடன் அவர்களுக்கு ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பணியைப் பாராட்டி, அமரபுர பீடத்தின் அனைத்து தரப்பினரும் ஆசிர்வதித்து ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button