பெரும் வெற்றியை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரவித்துக் கொள்கின்றோம்.
அறகல போராட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற இரண்டு தேர்தல்களிலும், நாட்டில் அரசியல் நெருக்கடி தீர்க்கப்பாட்டால்தான் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அரசியல் தீர்வாக ஆட்சி மாற்றமொன்றை விரும்பி இலங்கை மக்கள் “தேசிய மக்கள் சக்தியை” வெற்றி பெறச் செய்துள்ளார்கள். இதன் காரணமாக NPP அரசாங்கமானது மக்களின் அமோக வரலாற்று வெற்றியை பெற்றதிற்காக எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனமகிழ்வடைகின்றோம்.
தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தங்களது நிலைப்பாடுகளை மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரணான பல விடயங்களை NPP கூறிவருகின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இக்காலத்தில் அவ் அழுத்தங்கள் காரணமாக தங்களது நிலைப்பாடுகளை மாற்றி கருத்துக்களை NPP தெரிவிப்பதானதும் பாராட்டத்தக்கதாகும் அதேவேளை பலமான எதிர்கட்சியின் அவசியமும் உணரப்படுகின்ற நலையில் NPP அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைத்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் இருந்தாலும் மக்கள் தாராளமாக 2/3 பெரும்பாண்மை வழங்கியதன் மூலம் மக்கள் ஆதரவுடன் அமைந்துள்ள இவ் NPP அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லோரும் மனிதர்கள் என்ற ரீதியில் அதிகமான அபரிவிதமான அதிகாரங்கள் மனிதனை கெடுக்கும் என்ற பொதுவான விதியின் அடிப்படையிலும். அதேபோன்று கடந்த காலங்களில் jvp தொடர்பாக வன்முறைகள், அரசியல் தவறுகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற விடயங்களும் இருக்கின்ற அதேவேளை தற்போது தேர்தலுக்கு முன்பும், பின்பும் என்ற ஒரு விடயத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்திவருவதாலும் இதற்கு முன்னர் இருந்த 2/3 பெரும்பாண்மை அண்மித்திருந்த அரசாங்கங்களால் ஜனாதிபதியின் அதிகாரங்களை கூட்டுதல் குறைத்தலை மையப்படுத்தி புதிதாக திருத்தப்பட்ட அரசியல் யாப்புச் சட்டங்களாலும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் 2/3 கிடைத்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது.
Jvp கூட பலமான எதிர்கட்சி அரசியலை தாராளமாக கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
நாட்டில் நாம் ஏற்படுத்திய மாற்றமானது மக்களுக்கான ஜனநாயக பங்குபற்றுலுடன் கூடிய ஆட்சி ஒன்றின் அவசியத்தை உணர்ந்ததனாலயே. அதேபோன்று இவ்வாறான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட “அறகல” போராட்டம் கூட ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இருந்தது ஆனால் அப்போதய ஆட்சியாளராக இருந்த கோட்டாபாய கூட இந்த போராட்டத்தை தடுத்திருக்கவில்லை. பின்னர் வந்த ரணில் விக்ரம சிங்க அவர்கள் இப்போராட்டத்தை கலைத்த போது அவருக்கெதிரான ஜனநாயகத்தின் எதிரொலிகள் பல நாடெங்கிலும் வலுப்பெற்றதை இங்கு சுட்டிக்காட்டலாம் என விரும்புகிறேன்.
எமது அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருந்த ஆட்சிமாற்றங்களின் போது,நல்லாட்சி அரசாங்கம் என்ற தொணியில் வந்த ஆட்சி , 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று கூறப்பட்ட ஆட்சி, என்ற அத்தனை அரசாங்கங்களும் பலமான எதிர்கட்சி அரசியல் ஒன்று இருந்ததனால்தான் மக்களினால் வலுவற்றதாக்கப்பட்டிருந்தது. இதன் வரிசையில் தற்போது NPP அரசாங்கத்திற்கான அலை நாட்டில் காணப்படுகின்றது.
ஆகவே, நல்ல மாற்றத்தை ஏற்படுத்த எத்தணிக்கின்ற பலமான NPP அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை தற்போது அரசாங்கம் பெற்றுள்ள அறுதிப்பெரும்பாண்மையை சிறந்த தீர்வுகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எது எவ்வாறு இருந்தாலும் தற்போது தாராளமாக இனவேறுபாடின்றி ஒரேநாட்டவர்களாக எல்லா இனமக்களும் தேசிய மக்கள் சக்தியை நம்பியும் அதன் தலைவர் ஜனாதிபதி அநுரகுமாற அவர்களின் வார்த்தைகளை நம்பியும் தங்களது ஜனநாயக உரிமையின் மூலம் இவ் அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பாண்மையை மக்கள் வழங்கியுள்ளார்கள் என்பதை மனவுவந்து ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இத் தேசிய மக்கள் அரசாங்கத்தின் மூலம் சிறந்த மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்கள், மக்கள் தீர்வு சட்ட உருவாக்கம், சட்ட திருத்தங்கள் என்ற நல்ல மாற்றங்கள் இதயசுத்தியுடன் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப் பட வேண்டும் என்ற உயரிய எதிர்பார்ப்புடன் பிரார்த்தனைகளையும் அமைத்துக் கொள்கின்றோம்.
MLM.சுஹைல்