News
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி கட்சி செயற்பாட்டு அலுவலகத்தில் தனது கட்சி உறுப்பினர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அளுத்கமவின் தலைமுறையினரின் 7 தசாப்த கால சேவை இனி தேவையில்லை என கண்டி மக்கள் அண்மைய தேர்தலில் தீர்மானித்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் அரசியலை ஆரம்பித்த நாள் முதல் கண்டி மக்களுக்கு தன்னால் இயன்றவரை சேவையாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.