News
கிண்ணியா கடற்கரையில் மஹ்ரூபா முனவ்வரா என்ற பெண் ஜனாஸாவாக மீட்பு
கிண்ணியா – தோனா கடற்கரையிலிருந்து இன்று முற்பகல் பெண் ஒருவரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.
கிண்ணியா அஹம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஹ்ரூபா முனவ்வரா ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நீராடச் சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமெனக் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது