News

கட்சி, பேதங்களை துறந்து பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்போம்

கட்சி, இனம், மதம், வர்க்கம் மற்றும் உண்டான ஏனைய பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஒரு நாடாக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

மனிதநேயத்தின் பெயரால் அவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும். இதன் பொருட்டு சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டும். பேச்சுக்களோடும், அறிக்கைகளோடும் சுருங்கி விடாது, பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாமனைவரும் முன்நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து எமது ஆதரவை வெளிப்படுத்துகிறோம். பலஸ்தீன விடுதலைக்காக என்றும் நாம் முன்நிற்போம். ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, அந்த மக்கள் வாழும் இடங்களில் குண்டுவீச்சுக்கு எதிராக உலகத் தலைவர்கள் குரல் எழுப்ப வேண்டும். இதனை வெறும் பேச்சோடு சுருக்கிக் கொள்ளாது செயலில் காட்ட வேண்டும். பேச்சுக்களில் இருப்பது செயலிலும் இருக்க வேண்டும். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழும் யுகத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் (United Nations day for solidarity with Palestine people) இன்று(29) அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் நிமித்தம் கொழும்பு லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Recent Articles

Back to top button