News

தேங்காய் பற்றாக்குறைக்கு முன்னைய அரசே பொறுப்பு

தேங்காய் பற்றாக்குறைக்கு முன்னைய அரசே பொறுப்பு கூறவேண்டும் என பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,

தேங்காய் பற்றாக்குறைக்கு முன்னைய அரசே பொறுப்பு கூறவேண்டும்.இன்னும் 5 அல்லது 6 வருடங்களிலேயே நாம் தேங்காய் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும்.உலகத்தில் 13 நாட்களில் காய்க்ககூடிய தேங்காய் எங்கே உள்ளது என்பதை நாம் தேடிப்பார்க்கிறோம். தேங்காய் பற்றாக்குறைக்கு முன்னைய அரசே பொறுப்பு கூறவேண்டும்.

2009 ம் ஆண்டு முதல் தென்னை மரங்களுக்கு பசளை இடவில்லை என முன்னாள் தென்னை பயிர் சபை தலைவரிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறான ஒரு வரலாற்றை வைத்துக்கொண்டு தேங்காய் இல்லை என எம்மிடம் கேட்கின்றனர்.

அடுத்த 2 வருடம் வெளிநாட்டு கடனுக்கு வட்டி மாத்திரம் 81000 கோடி செலுத்த வேண்டியுள்ளது.அடுத்த வருடம் 40000 கோடி வெளிநாட்டு கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதுவே முன்னைய ஆட்சியாளர்கள் எமக்கு விட்டுச்சென்றது என அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button