News
கோழிகளுக்கு அரிசியை மட்டும் கொடுத்தால், அவை இடும் முட்டைகளின் மஞ்சள் கருக்கள் வெள்ளையாக மாறும்’

மனித பாவனைக்கு எவ்வளவு அரிசி தேவை மற்றும் கால்நடைகளின் பாவனைக்கு எவ்வளவு அரிசி தேவை என்பது குறித்த சரியான தரவுகள் நாட்டில் இல்லை என வர்த்தக மற்றும் கூட்டுறவு உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கு தேவையான அரிசியின் அளவும் தொடர்பிலேயே இந்த நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழிகளுக்கு அரிசி அதிகம் தேவை என்றும், அரிசியை மட்டும் ஊட்டினால் மஞ்சள் கரு வெள்ளையாக மாறும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக முறையான தரவுத்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து செயல்படும் போது, இந்த விவகாரங்கள் அனைத்தையும் சிந்திக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



