News

ஹோட்டல் பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்த சுற்றுலா பயணிகள் குழு நாட்டை விட்டும் சென்றது.

வாதுவையில் உள்ள ஒரு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி, போலந்து நாட்டவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு குறித்த பெண் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.



ஜனவரி 19 ஆம் திகதி, குடிபோதையில் மற்றும் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படும் போலந்து நாட்டவர்கள் குழு, ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்தபோது, 40 வயதான குறித்த பெண் அதிகாரியை குளத்தில் தள்ளியதாகக் கூறப்படுகிறது.



விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.



இந்நிலையில், அவர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.



பாணந்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரி, சுற்றுலாப் பயணிகள் குழுவை குளத்தை விட்டு வெளியேறச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதன்போது போலந்து நாட்டவர்களில் ஒருவர் கோபமடைந்து, குறித்த பெண்ணை குளத்தில் தள்ளியதாகவும், இதன் விளைவாக அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் போலந்து நாட்டவர்கள் குழு நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரியவந்துள்ளது.



சம்பவத்தைத் தொடர்ந்து பெண் அதிகாரியின் நிலையை ஹோட்டல் நிர்வாகம் போதுமான அளவு கவனிக்கவில்லையென பாணந்துறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி செயலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button