News
இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது

இலங்கையில் 442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை மின்சார முயற்சியில் ஈடுபடுவதில் இருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தனர் எனவும் அக்குழுமம் தெரிவித்தது.
“அதானி கிரீன் எனர்ஜி இலங்கையில் காற்றாலை ஆற்றல் திட்டம் மற்றும் இரண்டு பரிமாற்றத் திட்டங்களில் இருந்து விலகுவதற்கான அதன் வாரியத்தின் முடிவைத் தெரிவித்தது என ஒரு ஊடக அறிக்கையில் அக்குழுமம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாங்கள் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதோடு, இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புக்கு இனக்கம் தெரிவிப்போம் என அக்குழுமம் மேலும் தெரிவித்துள்ளது.




