News
கணக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் குரங்குகளும் CID க்கு அழைக்கப்படுமா ?

எதிர்வரும் 15 ம் திகதி அரசு நடத்தவுள்ள விலங்குகள் கணக்கெடுப்பிற்கு வராவிட்டால் குரங்குகளும் CID க்கு அழைக்கப்படுமா என முஜிபுர் ரஹ்மான் எம் பி மன்றில் கேள்வி எழுப்பினார்.
ஒரு சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உறவினர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் இருப்பதால் அதனை சுட்டிக்காட்டி அவர்களே எரிபொருள் பகிஸ்கரிப்பிற்கு காரணம் என அரசு கூறியது வேடிக்கையான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாக கூறி வந்த அரசாங்கம் அதே பழைய தியரியை முன்னெடுத்து செல்வதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் பட்டியல் வெளியிடுவதை விடுத்து உருப்படியாக ஏதாவது செய்யுமாறு அவர் கோரினார்.



