News

ருஷ்தி கைது விவகாரம்… ஸ்டிக்கருக்கு அப்பால் அவரது நடத்தை மற்றும் பின்னணி ஆகியவை ஆபத்து சமிக்ஞைகளை எழுப்புவதாகவும் பொலிஸார் தெரிவிப்பு

கொழும்பில் உள்ள  வணிக வளாகத்தில் பணிபுரிந்த 22 வயது வாலிபர் (ருஷ்டி) ஒருவரை சமீபத்தில் கைது செய்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய கூற்றுகளை பொலிஸார் இன்று மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கையில்..

“22/03/2025 அன்று கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டமை தொடர்பில், சமூக ஊடகங்களில் சிலர் இது தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் சரியானவையல்ல என்பதுடன், சமூகத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது சிறிலங்கா காவல்துறையினரின் பொறுப்பாகும்.

இந்த ஸ்டிக்கர் ஒட்டியமஜ் தொடர்பான தகவலின் அடிப்படையில் இலங்கை போலீசார் விசாரணையை தொடங்கி பின்னர் விசாரணையில் இச்செயலை செய்த இளைஞன் குறித்து வெளியான தகவலின்படி ஸ்டிக்கர் ஒட்டுவதை தாண்டி கடும் போக்குடையவர் என தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபரின் செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில், இணையம் மற்றும் ஏனைய முறைகளை பயன்படுத்தியமையினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவதானிக்கப்பட்டுள்ளதால், அந்த மன நிலையை அடிப்படையாக கொண்டு மதவாதத்தை மேற்கொள்ளும் திறன் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேகநபரின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் மத்தியில் பல்வேறு தேசிய மற்றும் மத விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில், மேற்கண்ட கைதுதொடர்பான பிழையான தகவல் சமூக மயமாவதின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் தேசிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் “ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக, நேற்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டி, அவரை விடுதலை செய்யக் கோரினர்.

வணிக வளாகத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த அந்த சந்தேக நபர், தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button