News

ரிசாத் பதியுதீன்,  ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா ஒன்றினைந்து மாபெரும் சக்தியை வெளிக்காட்ட வேண்டும்

ஹஸ்பர் ஏ.எச்_

சிறுபான்மை கட்சி தலைவர்கள் வட,கிழக்கு மற்றும் மலையகத்தில் ஒன்றினைவதன் மூலம் யார் என்பதை இந்த அரசுக்கு எடுத்துக் காட்டலாம் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (08) மாலை இடம் பெற்ற  ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும்   கருத்து தெரிவிக்கும் போது நடந்த முடிந்த உள்ளூயாட்சி சபை தேர்தல் இந்த நாட்டினுடைய சிறுபான்மை சமூகம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை தலைவர்கள் இந்த நாட்டினுடைய சகல மக்களினதும் அங்கீகாரம் பெற்ற தேசிய மக்கள் சக்தி முதலான கட்சிகளின் தலைவர்களுக்கும் பல உண்மைகளை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் தேசிய மக்கள் சக்தியின் , ஜே.வி.பி உடைய செயலாளர் ரில்வின் சில்வா அவர்களும் நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவர்களுடைய அமைச்சர்களும் இந்த தேர்தலை மாபெரும் வெற்றியாக வெளிக்கொணர்கின்ற போதும் கூட நடந்து முடிந்த பொதுத் தேர்தலை விட 20 இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள்.

தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும் என்பதை முஸ்லீம் சமூகம் சொல்லுகின்ற உரிமைகளை கதைக்கின்ற போது இனவாதம் மதவாதம் என்று கூறுவதை விட்டு விட்டு
அதே போன்று வடபுலம் தமிழ் மக்கள் கைகளிலே இல்லை அது தேசிய மக்கள் சக்தியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வோம் என்று சொல்வதை விட அந்த பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிக்ஷரசு கட்சிக்கும் விக்னேஸ்வரன் தலைமையில் இருந்த ஜனநாய முண்ணனிக்கும் கஜேந்திர குமாருடைய இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் அங்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது மட்டுமன்றி
கிழக்கு மாகாணத்தின் சிவநேச துறை சந்திரகாந்தன் அவர்களுக்கும் 37 க்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் ஒரு சபையை வழங்கியிருப்பதில் இருந்து ஈபிடிபி கூட அங்கு தீவுப் பகுதியில் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்ற நேரத்தில்
தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்து மாபெரும் சக்தியாக ஒன்றினைவதன் மூலம் தமது பலத்தை நிரூபித்து காட்டலாம். வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றினைவதன் மூலம் இதனை செய்யலாம்.
முஸ்லீம் கட்சி தலைவர்களான அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா ஒன்றினைந்து மாபெரும் சக்தியை வெளிக்காட்டுவதன் மூலம் சரியான பலத்தை  காட்டிக் கொள்ள முடியும்.
தலைவர்கள் மாற வேண்டும் அதே போல ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியை தங்கள் கருத்திற் கொண்டு வருகின்ற இரண்டாம் திகதிக்கு முன்னர் இவர்கள் யார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.


—
Hasfar A Haleem BSW (Hons)
Journalist

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button