சிஸ்டத்தை மாற்ற வந்த NPP கொள்கை மாறிவிட்டதா ?

NPP க்கு பன்றி கறி ஹராம்,ஆனம் ஹலால் என்பது போலவே உள்ளது.
“ஊழல் மோசடிகளை ஒழித்து நல்ல ஆட்சிமாற்றங்களை கொண்டுவருவதற்கு JVP / NPP மாத்திரமல்ல பல கட்சிகளும் பலரும் உழைத்திருக்கிறார்கள்.”
“அரசியலுக்காக வன்முறைகளை பயன்படுத்தாத, நல்ல திட்டங்களை எதிர்க்காத, அதிகாரத்திற்காக பொய் சொல்லாத NPP யினரை விட நல்லவர்களும் / கட்சிகளும் தாராளமாக NPP க்கு வெளியிலும் இருக்கின்றன.”
வேறு கட்சிகளிலும் கிராமத்துக்காக உழைத்த நல்லவர்கள் உள்ளனர்.கட்சி என்ற வகையில் இணையாமல் தனிபட்ட முறையில் அவர்களை இணைத்துக்கொண்டு சபைகளில் ஆட்சியமைப்போம். என்ற விஜித்த ஹேரத் அவர்களின் கருத்தானது “பன்றி கறி ஹராம், ஆனால் அதன் ஆனம் ஹலால் ” என்பது போல உள்ளது.
ஏனை கட்சியலுள்ளவர்களை இணைப்பதென்பது தவறுகிடையாது இதற்கான அடிப்படை அனைத்து அரசியல்வாதிகளையும் பிழையாக காட்டியும், கள்வர் பட்டம் வழங்கியும் அனைத்து சிஸ்டத்தையும் மாற்றுவதற்காக தேசியமக்கள் சக்தியினர் தங்களை அதிதூய்மைவாதிகள் என நிறுவ முயன்றதனால்தான் பல விடயங்கள் விமர்சனத்துக்குட்படுத்தப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரம் NPP க்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் JVP ஆட்களோ அல்லது NPP ஆட்களோ கிடையாது அவ்வாறு நாம் முத்திரைகுத்தவும் முடியாது மாறாக இலங்கை அரசியலில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நினைத்தவர்களாகவும், இலங்கை அரசியலில் மூன்றாம் சக்தியின் தேவையை உணர்ந்தவர்களாகவுமே பெரும்பாலானவர்கள் இருந்தார்கள் என்றாலும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கையீனங்களே ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலமையே உருவாகியுள்ளது.
MLM.சுஹைல்


