News

“கட்சியை தலைமை தாங்கும் ஜனாதிபதி என்பதைவிட , தேசத்தை தலைமை தாங்கும் ஜனாதிபதியையே மக்கள் விரும்புகின்றனர்.”

“அண்மைக்கால ஜனாதிபதியின் உரைகளை பார்க்கின்றபோது எச்சரிக்கை தொணியில் கட்சியின் தலைவராகவே செயற்படுவது போல் உள்ளது.”

“ஜனாதிபதியாக பொறுப்பெடுக்கும் முதலாவது உரையில் “வாக்களித்த- வாக்களிக்காத அனைவரையும் சமனாக பார்த்து நல்லதொரு ஆட்சியை வழங்குவேன்” என்ற உறுதி மொழியினையும் ஜனாதிபதியவர்கள் வழங்கியதை இங்கு ஞாபகப்படுத்தலாம்.”

இந்த நாட்டு மக்களின் 42% வீதகமானவர்களின் வாக்குகளைப் பெற்று ஜனநாயக ரீதியாக இந்த தேசத்தின் ஜனாதிபதியாக அநுரகுமார அவர்கள் பொறுப்பெடுத்தார்கள். உண்மையில் தேசிய ரீதியாக பின்னடைந்திருந்த ஒரு கட்சிக்கு அதாவது 3% வாக்குப் பலத்தைக் கொண்டிருந்த கட்சிக்கு அதிகப்படியான பொரும்பாண்மையை வழங்கி NPP யையும், ஜனாதிபதியாக அநுரகுமார அவர்களையும் மக்கள் தெரிவு செய்தது கடந்த ஆட்சியாளர்களின் மீதிருந்த அதிர்ப்தியினாலேயே தவிர வேறொன்றில்லை.

கடந்தகால ஜனாதிபதிகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஜனாதிபதி என்ற மக்கள் ஆணையை கொண்டு தங்களது கட்சியை வளர்க்க அல்லது கட்சி நலனை மையப்படுத்தி பெரிதும் செயற்பட்டதனாலேயே இந்த நாட்டில் ஊழல் மோசடிகளும், மக்கள் விரோத அரசியலும் அரங்கேற்றப்பட்டு ஆட்சி மாற்றத்தின் தேவையும் உணரப்பட்டது.

“அதேபோல் வெறும் ஆட்சிமாற்றத்திற்காக அல்லாமல் மக்கள் நலன் சார்ந்த பயனுள்ள ஆட்சி முறை மாற்றத்திற்காகவே மக்கள் ஜனாதிபதிக்கும், NPP அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தார்கள்.”

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலானது 60:40 என்ற கலப்பு முறையானது சபையில் பெரும்பாண்மையை பெருவதில் பெரிய பெரிய கட்சிகளுக்கொல்லாம் சவாலாக அமைந்துள்ளது இதில் தற்போதய NPP அரசாங்கத்திற்கும் பாரிய சவாலாகவே இருக்கின்றது. என்றாலும் இதுவும் ஒரு வகையான மக்கள் ஆணையே தவிர ஜனநாயக விரோதம் இல்லை.

உண்மையில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பது NPP க்கு சவாலாக இருந்தாலும், தற்போது NPP தொடர்பான அதிர்ப்தி மனோநிலைக்குக் காரணம் இந்த தேர்தல் முறையல்ல மாறாக NPP தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் தற்போது பொய்பித்துப் போனதலாகும்.

1.மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களின் பின்னர்தான் குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

2.எரிபொருளின் விலையை அவசரமாக குறைக்க முடியாது என்று தேர்தல் காலத்தில் கூறியிருக்க வேண்டும்.

  1. IMF கடன் ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட முடியாது என்று தேர்தல் காலத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
  2. அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்த முடியாது என்று.
  3. சம்பள உயர்வு தொடர்பான விடயங்கள்.

6.பயங்கர வாத சட்டத்தை இல்லாதொழிக்க மாட்டோம்.

இவ்வாறு இன்னும் பல விடயங்களை அடிக்கிக் கொண்டே செல்லலாம். அவ்வாறெனில் மேலுள்ள வாக்குறுதிகள் வெறுமனே வாக்குகளை பெறுவதற்காகவா? என்ற வலுவான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இவைகள் மாத்திரமல்ல NPP மக்கள் பிரதிநிதிகளுடைய வேடிக்கையான, நகைச்சுவையான, சாத்தியப்பாடற்ற திட்டங்களும் உரைகளும் தான் என்பதை கசப்பான உண்மையாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டியுமுள்ளது.

என்பதை சவாலாக கருதி இக் குறைபாட்டை நீக்கி, வாக்குறுதியை நிறைவேற்றி மீண்டும் மக்கள் மனதை வென்று NPP க்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நம்பிக்கையூட்டி கட்சியின் தலைவராக செயற்படாமல் தேசத்தின் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button