(PHOTOS இணைப்பு) ஈரானின் ஏவுகனை தாக்குதலால் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் கடும் புகை மற்றும் தீ – பாதிக்கப்பட்டவர்களுக்கு இஸ்ரேஸ் மருத்துவக்குழு சிகிச்சை

ஈரானின் ஏவுகனை தாக்குதலால் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் தாக்குதல் தளங்களில் இருந்து புகை எழுகிறது.
பீர் ஷேபாவில் ஏவுகனை விழுந்த இடத்தில் கடும் புகை:
இஸ்ரைலின் தெற்கு பகுதியான பீர் ஷேபாவில் வெள்ளிக்கிழமை காலை ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகனை தாக்குதலால் கடும் புகை எழுந்துள்ளது.
இந்த தாக்குதலில் அருகிலுள்ள வீடுகளுக்கு பெரும் சேதமும், வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. தற்போது உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், மாகென் டேவிட் அடோம் மருத்துவக் குழுவினர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, மேலும் பாதிக்கப்பட்டவர்களை தேடி வருகினர்கள்.
ஈரானின் ஏவுகனை தாக்குதல்:
வெள்ளிக்கிழமை காலை, டெட் சீ, மேற்கு லாகிஷ், மேற்கு நெகேவ், காஸா எல்லை, மத்திய நெகேவ், தெற்கு நெகேவ் ஆகிய பகுதிகளில் வான எச்சரிக்கை ஒலித்தது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகனை இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரைல் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுவது:
பீர் ஷேபாவில் ஏவுகனை விழுந்த இடத்தில் வசிக்கும் ஒருவரின் உறவினர் கூறுகையில், “என் சகோதரனின் வீடு முழுவதும் புகையால் நிரம்பியுள்ளது. அவரை இன்னும் மீட்கவில்லை, ஆனால் அவருடன் தொடர்பு கொண்டோம், அவர் நலமாக உள்ளார்” என்றார்.
மற்ற புதுப்பிப்புகள்: ஈரானிலிருந்து ட்ரோன்கள் டெட் சீ பகுதியை இரு முறை ஊடுருவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகனை தாக்குதல் நடந்துள்ளது.
இஸ்ரைல் குடிமக்களை அழைத்து வர நியூயார்க்கிலிருந்து முதல் மீட்பு விமானம் புறப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரைலின் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச அணு ஆயுத முகமை (IAEA) தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஈரான் சட்ட நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளது.








