News

அமெரிக்காவுக்கு ‘கடுமையான விளைவுகளை தரக்கூடிய பதிலடி காத்திருக்கிறது என ஈரான் இராணுவப் பிரிவு எச்சரிக்கை

ஈரானிய இராணுவத்தின் கதாம் அல்-அன்பியா பிரிவின் பேச்சாளர், அமெரிக்கா மூன்று முக்கிய அணு ஆயுத தளங்களை குண்டுவீசி தாக்கியதைத் தொடர்ந்து, “கடுமையான விளைவுகளுடன் கூடிய பதிலடி நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஈரானிய செய்தி நிறுவனங்கள், பெயர் குறிப்பிடப்படாத அந்த பேச்சாளரை மேற்கோள்காட்டி, அமெரிக்கா இஸ்ரேல் சார்பாக “குற்றச்செயல்” செய்து, ஈரானின் இறையாண்மையை “முழுமையாக மீறியது” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“இந்த விரோத செயல், இறந்து கொண்டிருக்கும் சியோனிஸ்ட் ஆட்சியை (இஸ்ரேல்) மீட்டெடுக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது,” என அவர் கூறினார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதல், ஈரானின் “சட்டபூர்வமான மற்றும் பல்வேறு இலக்குகளின்” வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கதாம் அல்-அன்பியா என்பது, ஈரானின் பொது படைத் தளபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு சிறப்புப் பிரிவு ஆகும், இது இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையிலிருந்து (IRGC) தனித்து இயங்குகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button