News

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும்  தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியும்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதும், தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முடிவைப் பொறுத்து உள்ளது.

எவ்வாறிருப்பினும், ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவது குறித்து வைத்தியர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button