News

பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரச யந்திரம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தலைமையில் அரசு வரலாறு காணாத நிவாரன உதவிகளை வழங்க முன்வந்துள்ள நிலையில் அரச யந்திரத்தினூடாக அவை பாதிக்கப்பட்ட சகலரையும் சென்றடைவது உறுதி செய்யப்படல் வேண்டும்.

உடனடி மீட்பு பணிகளின் போது அரச அதிகாரிகள், பாதுகாப்பு படைகள் உங்கள் பகுதிகளில் களத்தில் விரைந்து செயற்பட்டார்கள் ?

உங்கள் பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் களத்தில் எவ்வாறு செயற்படுகின்றன?

உங்கள் பிரதேசத்தில் எத்தனை இடைத் தங்கல் முகாம்கள் இருந்தன/ இருக்கின்றன ? அவற்றை அரச அதிகாரிகள் பார்வையிட்டு பட்டியலில் உள்வாங்கியுள்ளனரா?

பாதிக்கப்பட்ட சகலரையும் கிராம சேவகர்கள் தம்மிடமுள்ள சேத விபரங்களுக்கான கேள்விக் கொத்துகளை தந்து பதிவு செய்து பற்றுக் சீட்டு தந்துள்ளனரா?

முகாம்களில் அல்லாது மஸ்ஜிதுகளில், உறவினர் நண்பர்கள் வீடுகளில் உள்ளவர்கள்  தம்மை கிராம சேவகர்களுடன் பதிவு செய்து கொண்டார்களா?

சேதமடைந்த உங்கள் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், கால் நடை வளர்ப்பு பண்ணைகள், வாகனங்கள், கடற்றொழில் படகுகள் வலைகள் என தொழிற்துறவு சார் விடயங்களை அரச அதிகாரிகள் பார்வையிட்டு தரவுகளை பெற்றுக் கொண்டனரா?

உங்களுக்கு தரப்பட வேண்டிய உடனடி நிவாரண கொடுப்பனவுகள் (உ+ம்: சுத்திகரிப்பு × வாழ்க்கைச் செலவு + உபகரணங்கள் கொள்வனவு) கிடைத்தனவா?

உங்கள் பிரதேசத்தில் அரச மருத்துவ சேவைகள், முகாம்கள் அல்லது அரச ஒருங்கிணைப்பில் பிறநாட்டு சேவைகள் கிடைக்கின்றனவா ?

உங்கள் பிரதேச ஆளும் ஏதிர்க்கட்சி பாராளுமன்ற, மாகாண சபைகள், உள்ளூராட்சி மக்கள் பிரதி நிதிகள் களத்தில் இருந்து மேற்படி சேவைகள் உங்களை வந்தடைவதனை உறுதி செய்கிறார்களா?

உங்கள் பிரதேச சிவில் தலைமைகள் மஸ்ஜித் நிர்வாகங்கள் தொண்டர் குழுக்கள் அரச யந்திரம், காவல் துறை பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருக்கிறார்களா? அவர்களுக்கு உரிய அங்கீகாரம் ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தரப்படுகின்றனவா!

மேற் சொன்ன விடயங்களில் பாகுபாடுகள், புறக்கணிப்புகள் இடம்பெறுவதாக நீங்கள் கருதுகிறீர்களா ?

தயவு செய்து மேற்படி விடயங்களில் அவதானமாக இருந்து அவற்றை முறையாக ஆவனப்படுத்திக் கொள்ளுங்கள்!

இங்கு அரசியல் உள்நோக்கங்கள் இன்றி பின்னூட்டங்களையும் இடலாம் !

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
08.12.2025 || SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button