ஞானசார தேரருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் உயிர் அச்சுறுத்தல் ; நாமல் குமார..

ஞானசார தேரருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக நேர்காணலில் கருத்து வெளியிட்ட நாமல் குமார இதனை தான் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் தான் தெரிந்துகொண்டதாக குறிப்பிட்டார்.
சார்ஜன் நந்தலால் என்ற குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரி மேற்கொண்ட விசாரணையொன்றின் போது மாலைதீவில் இருந்து இரண்டு ஷூட்டர்கள் ஞானசார தேரரை கொலை செய்ய இலங்கைக்கு வந்துள்ளதை அறிந்துகொண்டு சி ஐ டி இயக்குனர் ஷானி அபேசேகரவுக்கு தெரிவித்ததாகவும் தற்போது இந்த விடயத்தை இழுத்தால் தேவையற்ற இன ரீதியான சிக்கல் வரும் எனக்கூறிய குறித்த பைல் மூடப்பட்டதாகவும் நாமல் குமார கூறியுள்ளார்.
சி ஐ டி இயக்குனர் ஷானி அபேசேகர குறித்த பைலை மூடியமை தொடர்பிலும் அவருக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் பற்றியும் தான் கூறியதாக நாமல் குமார கூறியுள்ளார்.



