சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை வர்த்தமானி உறுதிப்படுத்தப்பட்டதற்கு, அதாஉல்லாஹ்வை சந்தித்து நன்றி தெரிவித்த சாய்ந்தமருது குழுவினர்

நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை வர்த்தமானி உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்காக முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், அக்கரைப்பற்று மாநகர மேயரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வை சாய்ந்தமருதைச் சேர்ந்த குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு கடந்த 2026 மே 19 ஆம் திகதி அக்கரைப்பற்று மாநகர முதல்வர் காரியாலயத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது நகரசபை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில், சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை வர்த்தமானி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை வெளியிடுவதில் அதாஉல்லாஹ் முக்கிய பங்காற்றியமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது சாய்ந்தமருதின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது
UMAR LEBBE NOORUL HUTHA UMAR



