NPP அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது.. மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது..
அரச உத்தியோகத்தர்களுக்கான புகையிரத பருவகால பயணச்சீட்டுகள் இனி ஒன்லைன் மூலம்: புதிய டிஜிட்டல் வசதி ஆரம்பம்!
அரசின் தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கு அமைய, அரச துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான மற்றுமொரு முன்னோடி நடவடிக்கையாக, அரச உத்தியோகத்தர்களுக்கான சலுகை அடிப்படையிலான புகையிரத பருவகால பயணச்சீட்டுகளை (Railway Season Tickets) ஒன்லைன் (Online) முறைமையினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்கள் இனிவருங்காலங்களில் தமது உத்தியோகத்தர்களுக்காக புகையிரத சலுகை பருவகால பயணச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, ‘பிரவேஷ’ (Pravesha) ஒன்லைன் புகையிரத டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்துகொள்வது கட்டாயமாகும். இதற்கமைய, அரச நிறுவனங்களை இந்த அமைப்பில் பதிவு செய்யும் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் பத்தரமுல்ல “Waters Edge” ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆரம்ப விழாவில் 35 அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பதிவு செய்யும் முறை மற்றும் முக்கிய திகதிகள்
சலுகை பருவகால பயணச்சீட்டு வசதி தேவைப்படும் அரச உத்தியோகத்தர்கள், Pravesha மொபைல் செயலி (Mobile App) மூலமாக அல்லது WWW.Pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக அல்லது தாம் பணிபுரியும் அரச நிறுவனத்தின் உரிய பாடப் பொறுப்பதிகாரியின் ஒருங்கிணைப்புடன், அந்த நிறுவனத்தின் ‘பிரவேஷ’ ஒன்லைன் பிரவேசத்தின் (Online Portal) ஊடாக இச்சேவையில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.



