News

ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைமை தேவையில்லை… ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய உடல், புதிய இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் 10 ஆண்டுகள் இளமையாக மாறியுள்ளார் ; ஹரீன் பெர்னான்டோ


தனியாகச் செயல்படுவதை விடுத்து, பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்  கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 72 பேரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.


“சஜித்துடன் எவ்வாறு பணியாற்றுவது? எவ்வாறு முன்னோக்கிச் செல்வது? என்பது குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ கூறினார். 

கூட்டு எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்றும் கூறப்பட்டது. இவ்வாறு பல விஷயங்கள் பேசப்பட்டன. 

அவரது பைபாஸ் (அறுவை சிகிச்சை)க்கு பிறகு முதுகுத்தண்டும் வலுவாக இருப்பதாக ஹரீன் நகைச்சுவையாகக் கூறினார்.

தலை மட்டுமன்றி, முதுகுத்தண்டும் இப்போது நன்றாக இருப்பதாகக் கூறினார்.”


“புதிய தலைமைத்துவம் குறித்து எதுவும் பேசப்படவில்லையா?”
“அப்படி ஒன்று தேவையில்லையே. இப்போது புதிய உடல், புதிய இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இளமையாக மாறியுள்ளார்.”
“அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு, இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.”


“சமகி ஜன பலவேகயவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போகிறீர்களா?”


“சமகி ஜன பலவேகயவுடனான உறவுகள் தொடர்ந்து வலுவாக உள்ளன.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சமகி ஜன பலவேகயவும் எவ்வாறு இணைந்து செயல்படப் போகின்றன என்ற விடயத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.”


“மீண்டும் (பொறுப்பை) ஏற்கத் தயாராக இருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்குச் செல்வாரா?”


“பார்ப்போம், எவ்வாறு செல்வார் என்று.”
“அதாவது நாட்டின் நிலைமை சரியாக இல்லையெனில், அவர் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறாரா?”


“பெரும்பாலும் அதற்கு இயற்கையிடமிருந்தே தீர்வு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ரணில் விக்ரமசிங்க அங்கு வந்து நாட்டை அந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கிறார்.

எதிர்காலத்திலும் இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.”


“புதிய தலைமைத்துவம் குறித்து எதுவும் பேசப்படவில்லையா?”


“புதிய தலைவரா? இவர் இருக்கும் போது எதற்கு இன்னொரு தலைவர்?

சும்மா தலைவர்களை உருவாக்கிப் பயன் இல்லைதானே. இந்நாடு படுகுழியில் விழுந்துள்ளது. அந்தப் படுகுழியிலிருந்து மீட்டெடுக்கும் ஒருவரிடமே தலைமைத்துவம் செல்ல வேண்டும்.”


“அப்படியென்றால் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து முன்னோக்கி…”

“கூட்டு எதிர்க்கட்சியும் அதையேதான் செய்கிறது. இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், முன்னேற்றுவதற்கும் இவ்வாறான புத்திசாலித்தனமான, அனுபவமிக்க ஒருவரே கூட்டு எதிர்க்கட்சிக்கும் தேவைப்படுகிறார்.”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button