News

“கஷ்டப்பட்டு கைப்பற்றிய அதிகாரத்தை நாங்கள் அவ்வளவு எளிதாக மீண்டும் ஒப்படைக்க மாட்டோம்” – அமைச்சர் லால்காந்த

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு மாற்றப்பட்ட அதிகாரத்தை அவ்வளவு எளிதில் கைவிடப்போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மின்சார ஊழியர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய அமைச்சர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு அதிகாரம் மாறியுள்ளது. நாங்களும் அவ்வளவு எளிதாக இதனை கைவிட்டுவிட்டு, தூக்கி எறிந்துவிட்டுப் போக மாட்டோம். நாங்கள் இதனை ஒரு தட்டில் வைத்து ‘இந்தாருங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கொடுக்க மாட்டோம்.. ஏனென்றால், எங்களுக்கு ஒன்றும் இந்த அதிகாரம் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை.”

Recent Articles

Back to top button