News

வெனிசுலாவின் மிகப்பெரிய பாதாள உலக குழுவான ‘ட்ரென் டி அராகுவா’வின் தலைவரை கொன்று நரகத்திற்கு அனுப்பியதாக ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவின் ‘ட்ரென் டி அராகுவா’ கும்பலின் தலைவரை, அமெரிக்கா ஒரு “விரைவான மற்றும் கடுமையான” இராணுவத் தாக்குதலின் மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



ட்ரென் டி அராகுவா அமைப்பை அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளது.

ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது: “ட்ரென் டி அராகுவா பயங்கரவாதிகளுக்கு வெனிசுலாவிலோ அல்லது வேறு எங்குமே பாதுகாப்பான புகலிடம் இல்லை.



எனது தலைமையின் கீழ், இந்த கொடூரமான கொலைகாரர்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து, அவர்கள் சேர வேண்டிய நரகத்திற்கு அனுப்புவோம்.”



அந்தக் கும்பலின் தலைவரான ஹெக்டர் ரஸ்தன்போர்டு குரேரோ புளோரஸ், கடந்த டிசம்பர் மாதம் நியூயார்க் மத்திய நீதிமன்றத்தில், ராகெட்டிங் சதி மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டார்.



இந்த கும்பல் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எண்ணற்ற வன்முறைகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பொறுப்பாக இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் ஜே கிளேட்டன் அப்போது கூறியிருந்தார்.



குரேரோ புளோரஸைக் கைது செய்யத் தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.



இந்த நடவடிக்கை குறித்து வெனிசுலா அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button