News

இதுபோன்று எக்காலத்திலும் ஒரு அரசாங்கம் இப்படி வீழ்ந்ததில்லை…  புதிய நாட்டை உருவாக்க, விவசாயியின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, அடுத்த தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வோம் ;  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஒன்றரை வருடங்கள் ஆகும்போதே இலங்கை வரலாற்றில், மிக மோசமான வீழ்ச்சியை இந்த அரசாங்கம் சந்தித்துள்ளது..

ஒரு அரசாங்கம் இப்படி விரைவாக வீழ்ந்ததாக நான் நினைக்கவில்லை.

பொதுவாக ஒரு அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும், இல்லையா? ஆனால் இந்த அரசாங்கத்திற்கு அப்படி இல்லை.

இந்த அரசாங்கம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நாளுக்கு நாள் சீர்குலைந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது.


ஏன் அது? அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த அரசாங்கம் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றது தான்.


ஒரு புதிய நாட்டை உருவாக்குவதற்கு, நாட்டின் மக்களுக்கு பொய் கூறாமல், உண்மையான முறையில், இந்த நாட்டின் விவசாய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவும், அடுத்து நடத்தப்படும் தேர்தலில், திறமையான, இளைஞரான இந்த நாமல் ராஜபக்ஷ அவர்களை தலைவராக்குவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button