News

வளைகுடா நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவித்தது –  மொத்தம் 10 பில்லியன் டாலர்களை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துக்கொண்டது

ஈரான், வளைகுடா நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே சுமார் 3 பில்லியன் டாலர்களை ஈரானிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலும் பில்லியன் கணக்கான டாலர்களை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக நான்கு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மொத்தம் 10 பில்லியன் டாலர்களை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதாகவும், அதில் 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு பிராந்திய ஆதாரங்கள் தெரிவித்தன. மற்ற இரு ஆதாரங்கள் ஒட்டுமொத்த நிதியை 20 பில்லியன் டாலர்கள் எனக் குறிப்பிட்டதுடன், ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பகரமாக இந்த நடவடிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறின.


இந்த நிதி ஐக்கிய அரபு அமீரகத்தின் பணமா அல்லது ஐக்கிய அரபு அமீரக வங்கி அமைப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள ஈரானிய கணக்குகளில் இருந்து வந்ததா என்பதைத் தங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


பதற்றங்களைக் குறைக்கவும் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஆதரிக்கவும் UAE விரும்புவதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஈரான் கடைசியாக மே 4 அன்று புஜைரா துறைமுகத்தைத் தாக்கியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தை நேரடியாகத் தாக்கியிருந்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button