News

இன்று நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – நாட்டை மீண்டும் எம்மிடம் தாருங்கள்.. செய்து காட்டுகிறோம் ; மகிந்த அறிவிப்பு

நாட்டை எம்மிடம் தாருங்கள் நடத்தி காண்பிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“இன்று நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்கு மத்தியிலேயே தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கடத்துகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், மக்களுக்கு மூன்று வேளையும் உணவருந்தக்கூடிய நிலைமை காணப்படுகின்றதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,

“பொதுஜன பெரமுனவிற்கு பலம் உள்ளது. முடிந்தால் நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்துத் பாருங்கள், நாம் அதனை நடத்தி க் காண்பிக்கின்றோம் என சவால் விடுத்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button