News

கண்டி- கொழும்பு பிரதான வீதியில் இன்று பிற்பகல் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து, ஒருவர் உயிரிழப்பு

கண்டி-கொழும்பு பிரதான வீதியின் மொலகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பல வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு வான்கள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த முதிய ஒருவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button