பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம் – ஈரானுடனான வெற்றிகரமான இறுதி ஒப்பந்தத்திற்கு “மிகச் சிறந்த அடித்தளம்” அமைக்கப்பட்டுள்ளது என ஈரானுடனான பேச்சுவார்த்தையை அடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. வென்ஸ் தெரிவிப்பு.

அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. வென்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் :
பேச்சுவார்த்தையாளர்கள் “நிறைய நல்ல முன்னேற்றங்களை” அடைந்துள்ளனர், மேலும் ஈரானுடனான வெற்றிகரமான இறுதி ஒப்பந்தத்திற்கு “மிகச் சிறந்த அடித்தளம்” அமைக்கப்பட்டுள்ளது.
ஈரானிய தூதுக்குழு வெளிநடப்பு செய்யப்போவதாக அச்சுறுத்திய போதிலும், இன்று அதிகாலை வரை பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
பூர்வாங்க ஒப்பந்தத்திற்கு ஈரான் இணங்குவதை சரிபார்க்க ஐஏஇஏ (IAEA) அணுசக்தி ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்கு செல்ல உள்ளனர்.
அமெரிக்க சோயா பீன்ஸ், சோளம் மற்றும் கோதுமை ஆகியவற்றை வாங்குவதற்காக ஈரானிய சொத்துக்களை முடக்கத்திலிருந்து விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொள்ளலாம்.
ஹார்முஸ் நீரிணை “திறந்தே இருக்கிறது”, லெபனான் குறித்த சரியான ஒருங்கிணைப்பை அமெரிக்கா உறுதி செய்ய விரும்புகிறது மற்றும் வரும் நாட்களிலும் வாரங்களிலும் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் தொடரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. வென்ஸ் மேலும் தெரிவித்தார்.



