News

இன்னும் பல ஆண்டுகளுக்கு NPP ஆட்சிதான் .. வேறு எந்த அரசாங்கத்திற்கும் இடமில்லை…

இன்னும் பல ஆண்டுகளுக்கு வேறு எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தற்போதைய எதிர்க்கட்சியானது எதையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, முற்றிலும் ஆதரவற்ற நிலைக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறினார்.

மேலும், தற்போது நாட்டின் அரசியல் அதிகாரம் சாதாரண, மேல்தட்டு வர்க்கத்தைச் சாராத (சாமானிய) மக்களின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்காலகட்டத்தில் அறுவடை செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்ய முடியாமல் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவர்கள் எழுப்பும் புகார்கள் குறித்து இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பினார்.

இப்பிரச்சினைக்கு நேரடியாக பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தானும் விவசாயம் செய்யும் ஒருவர் என்பதை நினைவு கூர்ந்ததோடு, இந்த நாட்களில் நெல் விற்பனை செய்யும் அளவுக்கு இன்னும் நெல் அறுவடை பரவலாக நடைபெறவில்லை என்றும் கூறினார்.

Recent Articles

Back to top button