மடவளை மதீனாவின் முன்னாள் மாணவன் வவுனியா முகமது அஸ்பீ இன்று உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

வவுனியாவை சேர்ந்த அப்துல் கரீம் முகமது அஸ்பீ (Mohamed Asfee) அவர்கள் சட்டத்தரணியாக உயர்நீதிமன்றில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று 22.06.2026 திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசர் தலைமையில் இடம்பெற்ற சம்பிரதாய நீதிமன்ற அமர்வில் (Ceremonial Court Sitting)
வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த முகமது அஸ்பீ (Mohamed Asfee) அவர்கள் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் வவுனியா பட்டாணிச்சூரைச் சேர்ந்த அப்துல் கரீம் மற்றும் பரிதா பீபி ஆகியோரின் புதல்வர் ஆவார்.
இவர் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மற்றும் கண்டி மடவளை மதினா தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவர் ஆவார்.
ஆரம்பத்தில் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சை மூலம் தேர்வு செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் எழுதுவினைஞராக நியமிக்கப்பட்ட இவர் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் மேல் நீதிமன்றம் ஆகியவற்றிலும் கடமை ஆற்றியுள்ளார். மன்னார் மேல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது உரைபெயர்ப்பாளராகவும் (Interpreter) கடமையாற்றியுள்ளார்.
பின்னர் அஞ்சல் திணைக்களத்தில் அஞ்சல் அதிபர் (Postmaster ) சேவையில் இணைந்து கொண்ட இவர் வவுனியா அஞ்சலகம் மற்றும் கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் (CME) ஆகியவற்றில் அஞ்சல் அதிபராகவும் கடமை ஆற்றியுள்ளார். இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு சட்டக்கல்வியை பூர்த்திசெய்து இன்று சட்டத்தரணியாக உயர்நீதிமன்றில் சத்திய பிரமாணம் செய்து கொண்ட இவர் நிதியியல் துறையில் ஒரு முதுமாணி (MSc in Finance) பட்டதாரியும் ஆவார்.



