News

தேசிய மக்கள் சக்தியினரிடையே மோதல்.. தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்.. இருவருமே பொலிஸ் நிலையம் சென்றனர்…

நோர்வுட் பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது.

இவ்வாறு மோதலில் ஈடுபட்டவர்கள், அக்கட்சியின் நோர்வுட் பிரதேச சபை தலைவர் பிரான்சிஸ் ஹெலன் (Francis Helen) மற்றும் அதே கட்சியின் இளைஞர் சக்தி அமைப்பாளராகச் செயற்படும் ரவிச்சந்திர துஷாந்த (Ravichandra Dushantha) ஆகிய இருவராவர்.

கடந்த 25ஆம் திகதி மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோதலின் பின்னர், தமக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இருவருமே பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது தமக்கு மருத்துவ சிகிச்சை தேவை என அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பொலிஸார் நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் (JMO) அறிக்கைகளைப் பெற்று அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நோர்வுட் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Back to top button