தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போய்விட்டது ; தெரன திலீத் ஜெயவீர

தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஊவ பரணகம சர்வஜன சபையை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊவ பரணகம சர்வஜன சபையை அமைத்தல் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் தலைமையில் இன்று (27) முற்பகல் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர:
“இன்று பல்வேறு காரணங்களால் நமக்கு ஒரு பெரிய அரசியல் களம் கிடைத்துள்ளது.. அதற்கு இந்த அரசாங்கத்திற்குத்தான் நன்றி கூற வேண்டும்.. ’76 ஆண்டுகால சாபக்கேடு மோசமானது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றுவோம்’ என்று கூறிக்கொண்டே இவர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள்.. அப்படியென்றால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நடந்தது? அப்படியென்றால் பெரிய அளவில் ஏதேனும் நடந்திருக்க வேண்டுமே.. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து பல அவதூறுகளைப் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.. அவர் இந்த விவசாயிகளின் விவசாயப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறாரா? அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்துப் பேசுகிறாரா? இல்லை, அவர் பேசுவதில்லை.. அதற்குப் பதிலாக அவர் நாடகங்களை மேடையேற்றி, அந்த நாடகங்களின் சுருக்கத்தை வழங்கி, இந்த நாட்டின் பெரும்பான்மையான புத்திசாலி மக்களைப் பெருமளவில் அவமதித்துள்ளார்.. நமது கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது நாகரிகமான அரசியல் பற்றிப் பேசினார்.. அந்த வார்த்தையைக் கூறும்போது அது அவருக்குப் பொருத்தமாகவே இல்லை.. ஏனெனில், அவரது வாயிலிருந்து ‘நாகரிகமானது’ என்ற வார்த்தை வரும்போது, பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசப்பட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்த சம்பவமே நமக்கு நினைவுக்கு வருகிறது.. இன்று இந்த நாட்டு மக்கள் இழந்தது இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை.”



