தலசீமியா மேஜர் (Thalassemia Major) நோயால் பாதிக்கபட்டுள்ள ரிஸ்பாவுக்கு சிகிச்சை செய்து நோயை முழுமையாக குணப்படுத்த எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.
அன்புடையீர்,
நான் குழந்தையின் தந்தை M.S.M. ரிஸ்கான். எனது அன்பு மகளான M.R. ரிஸ்பாவிற்கு தற்போது 11 வயதாகிறது. எனது மகள் பிறந்து 6 மாதங்களிலேயே தலசீமியா மேஜர் (Thalassemia Major) நோய் இருப்பதை குருணாகல் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவின் உயர் வைத்தியரான தயானந்த பண்டார என்பவர் கண்டறிந்தார். அன்று முதல் இன்று வரை மாதந்தோறும் ஒரு முறை 26ம் வார்ட்டில் தலசீமியா பிரிவில் எனது மகளுக்கு இரத்தம் ஏற்றப்படுகிறது.
இந்த நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான ஒரே வழி எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone marrow transplant) ஆகும். இதற்காக இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள Narayana Health மருத்துவமனையில் Dr. சுனில் பாத் அவர்களினால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை எனது சொந்த முயற்சியால் மட்டும் திரட்டுவது மிகவும் கடினமான செயலாகும். எனவே நல்லுள்ளம் கொண்ட உங்களிடம் எனது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இயன்றளவு நிதி உதவியை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு உதவியும் என் மகளின் எதிர்கால வாழ்விற்கு நம்பிக்கையூட்டும். நீங்கள் செய்யும் உதவிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
இப்படிக்கு,
தந்தை
M.S.M ரிஸ்கான்
076 750 4488
076 350 4488
NIKAWERATIYA
M.S.M.RISKHAN
8830021122 COMMERCIAL BANK


















