News
புத்தளம் – வனாத்தவில்லு பிரதேசத்தில் தோணியில் சென்ற மூன்று (11 ஆம் வகுப்பு) பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வனாத்தவில்லு பிரதேசத்தின் மங்களபுர வில்லு பகுதியில் மலர் பறிப்பதற்காக தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வில்லு பகுதியில் மலர் பறிப்பதற்காக 05 மாணவர்கள் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி கவிழ்ந்ததில் மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மூன்று மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களாவர்.



