News

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்தது

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.



இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவிலிருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



மேலும், சாதாரண சேவையின் கீழ் 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயணங்களுக்கு பேருந்து கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களுக்கு 20 சதவீதத்தாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை, சொகுசு பேருந்துகளுக்கான கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது.

முதல் 100 கிலோமீற்றர் வரையிலான பயணங்களுக்கு 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு 15 சதவீதத்தாலும் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button