ஐபோன்கள் இந்து மதத்திற்கு எதிரானவை – அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னால் பதில் சொல்லும் ஐபோன், ஜெய்ஸ்ரீ ராம் கூறினால் பதில் தருவதில்லை என இந்தியாவின் மத்திய பிரதேச பிரமுகர் குற்றச்சாட்டு

”ஐபோன்கள் இந்து மதத்திற்கு எதிரானவை”: என இந்தியாவின் மத்திய பிரதேச பிரமுகர் வெளியிட்ட வீடியோவால் வெடித்த சர்ச்சை!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உலக அளவில் பிரபலமானவை. ஐபோன் புது புது மாடல்கள் வெளியாகும் போதெல்லாம் மக்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு மாடல்களையும் வாங்கி பயன்படுத்துவதை நாம் பரவலாக பார்க்க முடிகிறது. ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவோருக்கு என்ற சிரி (siri) என்ற வாய்ஸ் இன்டெலிஜென்ட் அசிஸ்டன்ட் (voice intelligent assistant) வசதி வழங்கப்படுகிறது.
Siri வாய்ஸ் அஸிஸ்டெண்ட் வசதி அனைத்து ஐபோன்களிலுமே இருக்கிறது. நீங்கள் ஹார் சிரி என கூப்பிட்டு கட்டளையிட்டால் போது சிரி அதனை நிறைவேற்றும். உதாரணமாக Hi Siri, call arun என கூறினால் உங்கள் போனில் அருண் என்ற பெயரில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு கால் செய்யும்.
அதே போல குரல் கட்டளை மூலம் நீங்கள் சொல்லும் வேலைகளை செல்லும். ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலானவர்கள் இந்த சிரி வசதியை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இந்த சிரி வசதி பயன்பாட்டில் தான் ஒரு சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையின் பகுதியை சேர்ந்த வலதுசாரி பிரமுகர் ஒருவர் ஆப்பிளின் சிரி வசதி இந்துக்களுக்கு எதிரானது என ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பான ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் அசிஸ்டெண்டாக செயல்படக்கூடிய சிரியிடம் நீங்கள் இஸ்லாமியர்கள் கூறும் அஸ்சலாமு அலைக்கும் (Assalamualaikum) என கூறினால் உங்களுக்கு பதில் தரும். இதுவே நீங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என கூறி பாருங்கள் அமைதியாகிவிடும் என புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியான சிரி இந்து மக்களின் நம்பிக்கையும் இந்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் செயல்படுகிறது என கூறியிருக்கிறார்.
அவருடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. ஐபோன் இந்தியாவின் கலாச்சாரத்துக்கு எதிரானது மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என கூறியுள்ளார். அவர் காட்டும் வீடியோவில் அசலாமலேக்கும் என கூறினால் சிரி பதிலளிக்கிறது ஆனால் ஜெய் ஸ்ரீராம் என கூறும் போது மௌனமாக இருக்கிறது என தெரிவிக்கிறார்.
இந்தியா முழுதும் கோடிக்கணக்கான இந்துக்கள் ஐபோன்களை பயன்படுத்துகின்றனர் ஆனால் சிரி-இன் இந்த செயல்பாடு எங்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி என அவர் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர் ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே ஆப்பிள் போனின் சிரி வசதியை பயன்படுத்தி காட்டினார்.
இந்தியாவை சேர்ந்த ஏராளமான மக்கள் கடன் வாங்கியாவது ஐபோன்களை வாங்குகிறார்கள் ஆனால் ஐபோன் வழங்கும் ஆப்பிள் நிறுவனமோ இந்தியர்களின் கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்காமல் உள்ளது என அவர் கூறி இருக்கிறார்.



