News

யோஷித ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒஃப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமியில் பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு வசந்த கரன்னாகொட ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.



இதன்படி, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button