News

அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களின்  “ஸஹ்ரா நிதியம்”  ஏற்பாடு செய்திருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான அதி நவீன சுத்திகரிக்கப்பட்ட குளிர் நீர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

மேல் மாகனத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களின்  “ஸஹ்ரா நிதியம்”  ஏற்பாடு செய்திருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான அதி நவீன சுத்திகரிக்கப்பட்ட குளிர் நீர் (Purified filtered cool water) இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 06-07-2026 ஸ்தாபகர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

வேற்றுமைகள் கடந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ,புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இதில் மள்வானையில் உள்ள (சிங்கள சகோதர இன பாடசாலையான ) சுபாசி ரோயல் கல்லூரிக்கு குறித்த தொகுதி வழங்கிவைக்கப்பட்டு அது மாணவர்களின் பாவனைக்காகவும் திறந்து வைக்கப்பட்டதோடு குறித்த பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 A பெற்ற மாணவி பத்திமா சஜ்வா (சுமார் 3 இலட்சம் பெறுமதியான)  அதிநவீன மடிக்கணணி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இரண்டாம் மூன்றாம் நிலையில் சித்தியடைந்தவர்கள் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டும் ஏனைய 10 மாணவிகள் தலா 10 ஆயிரம் ரூபா பணப்ரிசில்கள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்

பாடசாலை அதிபர் திரு டயஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை சமூகம் சார்பாக கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வுகளில் விசேட தேவையுடைய ஒரு மாணவனின் திறமையை பாராட்டி அம் மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டமை அனைவரையும் நெகிழவைத்திருந்தது.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

இங்கு கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்கள் உரையாற்றினார் இதன் போது தானும் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கல்வி மூலம் இந்நிலையை அடைந்ததாகவும் வறுமை கல்விக்கு தடையல்ல எனவே இப்பாடசாலையின் மாணவர்களின் எதிர்கால கல்விக்காக தான் முடிந்த உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார்

நிகழ்வுகளில் பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர் ஆசியர்கள் ,நிர்வாகம் ,பொலிஸ் பொறுப்பதிகாரி ,பெற்றோர்கள் ,மாணவர்கள் ,என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய இந்நிகழ்வுகள் பிரதேசத்திலும் ,பாடசாலை சார் சகோதர சமூகத்தினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button